விடாது துரத்தும் கொரோனா! ஆன்லைனில் நடைபெற்ற திருமணம்! வைரலாகும் புகைப்படம்!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் இதுவரை கொரோனா வைரசால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து இந்தியா வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டு, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா கோட்டங்குடம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவரது மகளுக்கு முகமது அத்னான் கான் என்பவருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகமது அத்னான் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். மேலும் திருமணம் ஞாயிற்றுக்கிழமை மண்டபத்தில் நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியாவில் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அவர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் ஊருக்கு வருவதற்கு விசா கிடைக்கவில்லை.
இந்நிலையில் இரு குடும்பத்தார்களும் ஆன்லைன் மூலமாக திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து, அவர்கள் குறித்த நாளில் வீடியோ கால் மூலமாக இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் திருமணம் கையெழுத்து போடுதல் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றுள்ளது.