திடீரென அசைந்த சூட்கேஸ்..! திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..! மாணவன் செய்த தரமான சம்பவம்.!

ஊரடங்கு மற்றும் கொரோனா பயம் காரணமாக தனது நண்பனை அபார்ட்மெண்டுக்குள் அனுமதிக்கவில்லை என்பதால், மாணவன் ஒருவர் நண்பனை பெரிய சூட்கேசுக்குள் அடைத்து அபார்ட்மென்டுக்கு எடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த மாணவர் ஒருவர் பெரிய சூட்கேசுடன் தனது அபார்ட்மெண்டுக்குள் நுழைந்துள்ளார்.
மாணவன் கையில் பெரிய அளவிலான சூட்கேஸ் வைத்திருப்பதை பார்த்த காவலாளி சூட்கேஷை கவனித்துள்ளார். அதில் திடீரென அசைவுகள் தெரியவே சூட்கேஷை திறந்துகாட்டுமாறு மாணவனிடம் கூறியுள்ளார். ஆனால், மாணவன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்களை வரவைத்து வலுக்கட்டாயமாக சூட்கேஷை திறந்து பார்த்தபோது உள்ளே மாணவனின் நண்பன் ஒருவர் இருந்துள்ளார். உடனே இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் விசாரித்தனர்.
தனது நண்பனை உள்ளே அனுமதிக்காததால் இவ்வாறு செய்ததாக இருவரும் கூறியதை அடுத்து போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இருவரும் கண்டித்து அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.