தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
மந்தி பிரியாணி சாப்பிட்ட இளம் செவிலியர் பரிதாபமாக உயிரிழப்பு... கதறும் குடும்பத்தினர்!!

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மி. இவர் அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தினத்தன்று ரேஷ்மி கோட்டயத்தில் உள்ள உணவகம் ஒன்றில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
அவர் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் உடல் நிலையில் முன்னேற்றம் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார் ரேஷ்மி.
மேலும் அந்த உணவகத்தில் சாப்பிட்ட 20 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவிலியர் இறந்ததை அடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் அந்த உணவகத்தில் பரிசோதனை செய்ததில் தரமற்ற உணவுகளை கண்டறிந்தனர். பின்பு குறித்த கடைக்கு சீல் வைத்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.