
லாட்டரி மூலம் கோடீஸ்வரர் ஆவதற்கு போட்ட பக்கா பிளான்.! பரிசு விழுந்த பணத்தை வாங்க சென்றபோது காத்திருந்த பேரதிர்ச்சி.!
லாட்டரி சீட்டு பல இடங்களில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில், கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை திருடியவனுக்கு ஒரு சீட்டில் பரிசு விழுந்த நிலையில் அதன் மூலமே திருடன் வசமாக சிக்கியுள்ளான்.
கேரள மாநிலம் கொத்தமங்கலத்தை சேர்ந்த பாபு என்பவர் அங்குள்ள ஒரு லாட்டரி ஏஜென்சியில் இருந்து பல லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை திருடிச்சென்றுள்ளார். இதனையடுத்து திருடப்பட்ட அணைத்து லாட்டரி சீட்டுகளின் எண்களும் கேரள மாநிலம் முழுக்க உள்ள ஏஜன்சி மூலம் அனைத்து இடத்துக்கும் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் திருடனை பிடிக்க திட்டமிடப்பட்டது.
இந்தநிலையில் பாபு திருடிய லாட்டரி சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு பரிசு விழுந்தது. இதனையடுத்து அந்த லாட்டரி சீட்டை ஒரு ஏஜென்சியில் கொடுத்து பரிசை பெற முயற்சித்துள்ளார். அப்போது உஷாரான கடைக்காரர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையறிந்த பாபு உடனடியாக அந்த சீட்டை பிடுங்கி கொண்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த பாபுவை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement