சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு பறக்கும் விமானத்தில் இளைஞர் செய்த காரியம்! இப்படியா செய்வது?

டெல்லி லாஜ்பத் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கபூர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொழில் செய்துவந்த இவர் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தனது தொழிலை விரிவுபடுத்த முயன்றபோது, அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இப்படியே தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் சில காலம் தாய்லாந்தில் வசித்துவந்த இவர் பின்னர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இந்தியாவிற்கு திரும்பிய இவருக்கு சொகுசு வாழ்க்கை வாழ ஆசை வந்துள்ளது.
இதனால் உயர்தர விமானங்களில் டிக்கெட் புக் செய்து வெளிநாடுகளுக்கு செல்வது, அவ்வாறு செல்லும்போது விமான பயணிகளிடம் திருடுவது, லக்கேஜ் இருக்கும் பகுதிக்கு சென்று அங்கிருக்கும் பொருட்களை திருடுவது என தொழிலாக செய்துவந்துள்ளார்.
இதுபற்றி பயணிகள் விமான நிறுவனங்களுக்கு புகார் அளித்ததை அடுத்து ராஜேஷ் கபூர் விமானங்களில் திருடுவது விமானத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட விமாங்கங்களில் இவர் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து தனது பெயரை மாற்றி ராஜேஷ் கபூர் உள்ளூர் விமானங்களில் பயணம் செய்துள்ளார். இவரை அடையலாம் கண்ட விமான நிர்வாகம் காவல் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.