பெங்களூரில் அதிர்ச்சி... வைரலான மனைவியின் ஆபாச படம்.!! வரதட்சணை தராததால் கணவன் ஆத்திரம்.!!



man-spread-wife-obscene-images-on-whatsapp

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரதட்சனை கொடுக்காததால் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த நபருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனக்கு 4 கோடி ரூபாய் வரதட்சனை தர வேண்டும் என கேட்ட அந்த நபர் தனது மனைவியை கொடுமை செய்து வந்திருக்கிறார். மேலும் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் அந்தப் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

India

இதனைத் தொடர்ந்து அவருக்கு வரதட்சணை கொடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சப் குழுக்களில் வைரலாக்கியிருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி இது தொடர்பாக காவல்துறையிடம் கணவர் மீது புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அந்தப் பெண்ணின் கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "படுக்க வரலைன்னா வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன்.." பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!! டாக்டரின் வெறி.!!

மேலும் அவரிடமிருந்து செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "காசு தரலன்னா, போட்டோ ரிலீஸ்.." இன்ஸ்டா நட்பால் இளம் பெண்ணுக்கு வந்த வினை.!! தந்தை, மகன் கைது.!!