இந்தியா

ஆத்தாடி! ரூம் போட்டு யோசிப்பாங்களோ! வெளிநாடு செல்லும் பயணியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

man smuggling money by groundnut

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நகைகள், வெளிநாட்டு பணங்கள், தங்கம் போன்றவை கடத்தி வரப்படுகிறது . மேலும் அவர்கள் விமான நிலைய சோதனையில் சிக்கி விடாமல் இருப்பதற்காக வித்தியாசமாக, எவருமே யோசிக்க முடியாத அளவிற்கு புதிய முறைகளை கையாளுகின்றனர். இதனாலேயே விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பயணிகளிடம் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு முராட் அலாம் என்ற நபர் சுற்றுலா விசா மூலம் பயணம் மேற்கொள்ளவிருந்தார். அப்பொழுது அதிகாரிகள் அவரது பைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவரது பைக்குள்கடலை மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்துள்ளது.

இந்நிலையில் அதிகாரி ஒருவர் கடலையை உடைத்து பார்த்தபோது அதனுள் வெளிநாட்டு பணங்கள் சுருட்டிக் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அனைத்து கடலை மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை  உடைத்து பார்த்தபோது அதன் உள்ளே சுமார் 40 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணங்கள் இருந்துள்ளது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அனைத்து பணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement