இந்தியா

பர்தா அணிந்து பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த அரசு ஆண் அதிகாரி! கோவாவில் பரபரப்பு

Summary:

Man misused burkha and entered ladies toilet

கோவாவில் பெண்கள் கழிவறைக்குள் முஸ்லீம் பெண்கள் அணியும் கருப்பு நிற பர்தாவை அணிந்து சென்ற ஆண் நபரை பெண்கள் வளைத்து பிடித்து போலிசில் ஒப்படைத்தனர். 

கோவா நகருக்கு நாள்தோறும் பல்வேறு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமான ஒன்று. பனாஜியில் பேருந்து நிலையம் அருகே உள்ள பெண்கள் கழிவறைக்குள் விர்ஜில் பெர்ணான்டஸ் என்ற அரசு ஊழியர் முஸ்லீம் பெண்கள் அணியும் கருப்பு நிற பர்தாவை அணிந்து சென்றுள்ளார். 

கழிவறையை விட்டு வெளியே வந்த அவரை ஒரு ஆண் என அங்கிருந்த பெண்கள் அடையாளம் கண்டுகொண்டனர். அதனைத் தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடித்த பெண்கள் போலிசில் ஒப்படைத்தனர். 

அவர் மீது முஸ்லீம் பெண்களின் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக செக்சன் 419 பிரிவின் கீழ் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement