தங்கை கணவரை கடப்பாரையால் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபர்! ஏன்? நடந்தது என்ன? பகீர் சம்பவம்.!

தங்கை கணவரை கடப்பாரையால் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபர்! ஏன்? நடந்தது என்ன? பகீர் சம்பவம்.!


man-killed-sisters-husband-for-done-love-marriage

தெலுங்கானா ரங்காரெட்டி மாவட்டம், பில்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 30 வயது நிறைந்த நாகராஜ். இவர் ஐதராபாத்தில் கார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் கனா போர் பகுதியை சேர்ந்த செய்யது அஸ்ரி சுல்தானும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் அஸ்ரி சுல்தான் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் நாகராஜ்க்கு போன் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அஸ்ரி சுல்தானை வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அறையில் பூட்டி வைத்துள்ளனர். இந்தநிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய அஸ்ரி ஹைதராபாத்தில் நாகராஜ் தங்கியிருக்கும் அறைக்கு சென்றுள்ளார்.

Love

பின்னர் இருவரும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ஆத்திரமடைந்த அஸ்ரி சுல்தான் குடும்பத்தினர் அவர்களை தேதி ஐதராபாத் வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த நாகராஜ் வேலையை விட்டுவிட்டு மனைவியுடன் விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். பின்னர் 4மாதங்களுக்கு மேலாக அஸ்ரி சுல்தான் குடும்பத்தினர் அமைதியாக இருக்கவே மீண்டும் அவர்கள் ஐதராபாத்திற்கு வந்துள்ளனர். நாகராஜ் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய நாகராஜை பின்தொடர்ந்து வந்த அஸ்ரி சுல்தான் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் அவரை கடப்பாரையால் தாக்கி, சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அஸ்ரி சுல்தான் சகோதரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கவுரவகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.