இந்தியா

ஒரு சோகம் மறைவதற்குள் மொத்த ஊரையே சோகத்தில் ஆழ்த்திய குடும்பம்! மனைவி இறந்த சோகத்தில் கணவன் செய்த காரியம்.

Summary:

தனது மனைவி உயிர் இழந்த சோகத்தில் கணவன் தனது மூன்று பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவி உயிர் இழந்த சோகத்தில் கணவன் தனது மூன்று பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பியன்ட் சிங். மோட்டார் சைக்கிளில் பொருட்களை எடுத்துச் சென்று வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார் சிங். இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிங்கின் மனைவி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

மனைவி இறந்த சோகம் மற்றும் தனி ஆளாக குடும்பத்தை சமாளிக்க முடியாமல் திணறி வந்த சிங் கடும் மனஅழுத்ததில் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் சோகத்தின் எல்லைக்கே சென்ற அவர், தனது குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து தனது 7 வயது மகன் மூன்று மற்றும் ஒரு வயது குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு அருகே தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து செய்துகொண்டுள்ளார் சிங்க்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனது மனைவி இல்லாததை தாங்கிக் கொள்ள முடியாததால் தான் இந்த சோக முடிவை எடுத்ததாகவும் சிங் ஒரு குறிப்பை எழுதி வைத்து இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனைவி இறந்த சோகத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தந்தை உயிரிழந்த சோகம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement