தந்தையின் சடலத்தை செல்போனில் பார்த்த மகன்..! பார்த்த அடுத்த நொடியே சுருண்டுவிழுந்து பலி..! வெளியான அதிர்ச்சி காரணம்.!

தந்தையின் இறுதி சடங்கிற்கு காரில் சென்றுகொண்டிருந்த மகன் செல்லும் வழியில்லையே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் ஆஞ்சநேய நாய்டு(78), இவரது மகன் பாபு நாய்டு(50), பாபு நாய்டு தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்துவரும் நிலையில் தந்தை சொந்த ஊரில் மரணமடைந்துவிட்டதாக உறவினர்கள் போன் செய்து தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து தந்தையின் இறுதி சடங்கிற்காக குடும்பத்தினருடன் பாபு நாய்டு காரில் வந்துள்ளார்.
வரும் வழியில் போலீசார் பாபு நாய்டுவின் காரை நிறுத்தி எங்கே செல்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்வதாக கூறியும் போலீசார் நம்பவில்லை, உறவினர்களிடம் கூறி புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளனர். இதனை அடுத்து பாபு நாய்டு உறவினர் ஒருவற்கு போன் செய்து தந்தையை சடலத்தை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார்.
உறவினரும் புகைப்படம் எடுத்து அனுப்பிய நிலையில், தந்தையின் புகைப்படத்தை போனில் பார்த்தவாறு பாபு நாய்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், பாபு நாய்டு மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும், தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரழிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.