அந்த மனசு எவ்வளவு வலிச்சிருக்கும்!! உதவிக்கு வராத சொந்த கிராம மக்கள்!! உயிரிழந்த தாயை தோளில் சுமந்து சென்ற மகன்!!Man carries his dead mother viral news

உதவி செய்ய யாரும் இல்லாததால் கொரோனாவால் இறந்த தனது தாய்யை மகன் தனியாளாக தோளில் சுமந்துசென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசம் காங்க்ரா மாவட்டத்தில் வசித்துவரும் நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தாய்யை மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் இடம் இல்லாததால் அவரை மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்ததாகவும், இதனால் அந்த நபர் தனது தாய்யை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நபரின் தாய் கடந்த வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். கொரோனாவால் இறந்தவர் என்பதால் அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது தாயின் உடலை அந்த நபர் தனி ஆளாக தோளில் சுமந்துசென்று அடக்கம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த நபர் கூறுகையில், தனக்கு உதவி செய்யுமாறு கிராம தலைவரிடம் கேட்டதாகவும், ஆனால் யாரும் உதவவில்லை எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த கிராமத்தின் தலைவர் கூறுகையில், உடலை தகனத்திற்கு எடுத்து செல்ல பிபிஇ உடை ஏற்பாடு செய்து வருவதாக கூறியபோது அந்த நபர் மறுத்துவிட்டதாகவும், உடலை எடுத்துச்செல்ல இரண்டு டிராக்டர்-டிராலி உரிமையாளர்களுடன் பேசியதாகவும், கொரோனா பயம் காரணமாக அவர்கள் வர மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.