இந்தியா லைப் ஸ்டைல்

20 வயது டென்னிஸ் வீராங்கனையை ஆபாசமாக படமெடுத்த 45 வயது பக்கத்து வீட்டுக்காரர்! இளம்பெண் போலீசில் புகார்

Summary:

man accused for capturing video of 20 year old girl

குருகிராமில் 20 வயது கல்லூரி மாணவியை 45 வயதை சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர் ஆபாசமாக சைகைகளை காட்டியும், ஆபாச வார்த்தைகள் பேசியும், வீடியோக்களை எடுத்தும் தினந்தோறும் தொல்லை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கல்லூரியில் படித்து வரும் 70 வயதான அந்த இளம்பெண் தேசிய அளவில் விளையாடி வரும் ஒரு டென்னிஸ் வீராங்கனையும் ஆவார். இவர் வசித்து வரும் அதே கட்டிடத்தில் 45 வயது மதிக்கத்தக்க விவேக் குரோவர் என்ற நபரும் வசித்து வருகிறார். அந்த நபரின் மீது ஏற்கனவே பெண்களின் மீது தவறாக நடந்து கொள்வது தொடர்பாக பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளன. திருமணமான அந்த நபருக்கு எந்த வேலையும் கிடையாது. எப்பொழுதும் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

தேசிய அளவில் டென்னிஸ் விளையாட்டில் விருதுகளை பெற்றுள்ள அந்த இளம்பெண் கல்லூரிக்கு சென்று வரும் போதெல்லாம் விவேக் குரோவர் அந்த பெண்ணிடம் ஆபாச வார்த்தைகளால் பேசுவதும், தவறாக நடக்க முயற்சி செய்வதும் மற்றும் புகைப்படங்களை எடுப்பதுமாக பல்வேறு தொல்லைகள் கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் இந்தப் பெண்ணால் என்பது யார் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

Image result for man capturing video in mobile

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்தப் பெண் அவரது வீட்டில் பால்கனியில் நடந்து செல்லும்போது விவேக் அந்த பெண்ணை தனது செல்போனால் ஆபாசமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை பார்த்து அந்தப் பெண் அவரை கேள்வி கேட்கவே அவர் உடனே வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த விவேக் அந்தப் பெண்ணை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் விவேக்கின் நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள மக்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அனைவருமே விவேக் அனைத்து பெண்களிடமும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வார் என புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் விவேக் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement