வெளியே போய் விளையாடக்கூடாது! 82 மாணவர்களுக்கு பாதி தலைக்கு மொட்டை அடித்து.... விடிய விடிய செய்த சித்திரவதை! நெஞ்சை உலுக்கும் கொடூரம்!!!



maharashtra-tribal-school-82-students-half-shaved

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சாம்புல்காட்டில் உள்ள அரசு பழங்குடியினர் நல ஆசிரமப் பள்ளியில் 82 மாணவர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும், மாணவர்கள் வெளியே சென்று விளையாடக் கூடாது என்ற காரணத்தைக் கூறி, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பாதி தலைக்கு மட்டும் முடி வெட்டப்பட்டுள்ளது.

நள்ளிரவு 10 மணியளவில் சலூன்காரர் ஒருவர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். விடுதி பொறுப்பாளர் உத்தரவின்பேரில், அதிகாலை 4 மணி வரை மாணவர்களுக்கு அரை மொட்டை அடிக்கும் வகையில் முடி வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

இதையும் படிங்க: 12 அடி ஆழ தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய அடுத்தடுத்த இறங்கிய மாணவர்கள்! தேங்கிருந்த விஷவாயுவை சுவாசித்ததால் நேர்ந்த விபரீதம்! 4 பேர் உயிரிழப்பு.. உயிருக்கு போராடும் 1 மாணவன்... பகீர் காட்சி!!!

சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள்

பாதி முடி வெட்டப்பட்ட நிலையில் இருந்த மாணவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அவை வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக பலரும் கேள்வி எழுப்பினர்.

புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த தண்டனை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பி.எஸ். கிரியிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து விவகாரம் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது.

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

இதுதொடர்பாக நாக்பூர் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் ஆணையர் விசாரணை நடத்தினார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்றும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து விசாரிக்கப்பட்டது. இதில் கடமை தவறியதாகக் கூறி, பள்ளி தலைமை ஆசிரியர் பி.எஸ். கிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: நெஞ்சே பதறுது...! அதிவேகமாக வந்த கார்... சாலையை கடக்க வளைந்த பைக் நொடிப்பொழுத்தில் காற்றில் தூக்கி வீசப்பட்ட 2 பேர்! நடுரோட்டில் நடந்த பயங்கர விபத்து...! ஷாக் வீடியோ...!!!