இந்தியா

ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு.. மினிவேனை இயக்கி ஓட்டுனரின் உயிரை காத்த பெண் பயணி..!

Summary:

ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு.. மினிவேனை இயக்கி ஓட்டுனரின் உயிரை காத்த பெண் பயணி..!

சுற்றுலாவுக்கு சென்று திரும்புகையில், வாகன ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட, சுதாரித்த பெண் பயணி வேனை இயக்கி ஓட்டுனரை விரைந்து மருத்துவமனையில் அனுமதி செய்தார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவை சேர்ந்த பெண்மணி யோகிதா சதவ் (வயது 42). இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன், புனே நகருக்கு அருகேயுள்ள ஷிரோர் பகுதியில் உள்ள வேளாண் மையத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். 

இவர்கள் அனைவரும் மினி வேனில் வேளாண் மையத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்த நிலையில், நகரில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் வருகையில், ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. 

சுதாரித்த ஓட்டுநர் வேனை சாலையோரமாக நிறுத்திவிட்டு, பயணிகளிடம் அவசர ஊர்தியை அழைக்க அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவசர ஊர்தி வர எப்படியென்றாலும் 10 நிமி முதல் 20 நிமிடம் ஆகலாம் என நினைத்த யோகிதா, மினி வேனை இயக்க முடிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, ஓட்டுனரை அவரின் இருக்கையில் இருந்து அப்புறப்படுத்தி அமர வைத்துவிட்டு, 10 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனை வரை பேருந்தை இயக்கி, ஓட்டுனரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார். பின்னர், நண்பர்களை அவர்களின் வீட்டில் கொண்டு சென்று இறக்கி விட்டுள்ளார். 

இந்த விஷயம் குறித்து பெண்மணி யோகிதா தெரிவிக்கையில், "ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவர் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு அவசர ஊர்தியை அழைக்க சொன்னார். 

ஆனால், சுதாரித்துக்கொண்ட நான், அவரை விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்து, வாகனத்தை இயக்கினேன். எனக்கு கார் ஓட்ட தெரிந்து இருந்ததால், வேனை எளிதாக இயக்கிவிட்டேன்" என்று தெரிவித்தார். இந்த நிகழ்வு கடந்த ஜன. 7 ஆம் தேதி நடத்த நிலையில், அதன் வீடியோ மற்றும் நிகழ்வு குறித்த தகவல் நேற்று சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement