சாதி மறுப்பு திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததால் ஆத்திரம்.. அரங்கேறிய சம்பவம்.!

சாதி மறுப்பு திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததால் ஆத்திரம்.. அரங்கேறிய சம்பவம்.!


Maharashtra Pune boycotting family over inter caste marriage

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் வசித்து வரும் கவாலி சமூகத்தை சார்ந்த நபரின் மகன், காதலித்து வேறொரு சமூகத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். மகனின் ஆசைக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், காதல் திருமணம் செய்த ஜோடி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். 

இந்நிலையில், இவர்களின் உறவினர் ஒருவருக்கு நிச்சயதார்த்த விழா நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் கலந்துகொள்ள காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை இடைமறித்த நிச்சயதார்த்த விழா உறவினர்கள், உங்களது மகன் காதல் திருமணம் செய்துள்ளான். நீங்கள் எதற்காக இங்கு வருகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர். 

maharashtra

மேலும், அவர்கள் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர், அந்தஷ்ரத்தா நிர்முலன் சமிதி (மூடநம்பிக்கைக்கு எதிராக போராடும் அமைப்பு) அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் விசாரணை செய்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், காதல் திருமணம் செய்த குடும்பத்தினருக்கு அனுமதி மறுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களின் மீது சமூக புறக்கணிப்பு சட்டம், மாநில சமூக சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்துள்ளனர்.