காதல் ஆசையில் விழுந்து மோசம்போனே 32 வயது இளம்பெண்; பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம்.!



Maharashtra Navi Mumbai 32 Women Lodged a Complaint Against Lover 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கலம்பொலி பகுதியை சேர்ந்த 32 வயது பெண்மணிக்கு, அப்பகுதியை சேர்ந்த இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இளைஞர் பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பெண்மணியும் இளைஞருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். 

maharashtra

பெண்ணின் வீடு, காதலரின் வீடு, புனே, பன்வெல் என காதலன் அழைத்த பகுதிக்கெல்லாம் சென்று வந்த இளம்பெண்ணை காதல் வார்த்தையை பயன்படுத்தி இளைஞன் பலாத்காரமும் செய்து இருக்கிறார். 

இந்நிலையில், இதனால் அவர் கர்ப்பமான நிலையில், திருமணம் செய்ய வற்புறுத்தியபோது பல காரணங்களை கூறி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இறுதியில் திருமணம் நடக்காததால், பாதிக்கப்பட்ட பெண்மணி நவிமும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் இளைஞரை தேடி வருகின்றனர்.