வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
12 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் சிகிரெட், சூடான பாத்திரம் கொண்டு சூடு வைத்து சித்ரவதை; நெஞ்சை பதறவைக்கும் காரணம்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், அத்வாரா நகரி பகுதியில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வரும் குடும்பத்தினர், தங்களின் வீட்டில் பணிப்பெண்ணாக பெங்களூரை சேர்ந்த 12 வயது சிறுமியை வேலைக்கு வைத்துள்ளனர்.
சம்பவத்தன்று சிறுமி சரிவர பாத்திரம் விளக்காததாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் சிறுமியின் உடலில் சூடான பாத்திரத்தை கொண்டு சூடு வைத்து இருக்கின்றனர். மேலும், சிறுமியின் பிறப்புறுப்பு பகுதியில் சிகிரெட்டால் சூடு வைத்திருக்கின்றனர்.
பின்னர் அனைவரும் புறப்பட்டு பெங்களூர் சென்றுவிட்ட நிலையில், வீட்டின் மின்சாரத்தை துண்டித்து சிறுமியை மட்டும் தனியாக வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர். கடந்த 4 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் சிறுமி பரிதவித்து இருக்கிறார்.
பின் எப்படியாவது இங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற முயற்சியில், சிறுமி அக்கம் பக்கத்தினரை கூச்சலிட்டு அழைத்து பார்த்துள்ளார். அவர்கள் சிறுமியை மீட்டு உணவு, தண்ணீர் வழங்கி பின் காவல் துறையினருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று, அவரை பணிக்கு வைத்து கொடுமை செய்த குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியை துன்புறுத்திய குடும்பத்தினருக்கு வலைவீசப்பட்டுள்ளது.