ஒரே மணமேடையில் இரட்டை சகோதரிகளை சண்டையே இல்லாமல் கரம்பிடித்த இளைஞர்.. சட்டத்தை மதிக்காததால் சம்பவம்.!

ஒரே மணமேடையில் இரட்டை சகோதரிகளை சண்டையே இல்லாமல் கரம்பிடித்த இளைஞர்.. சட்டத்தை மதிக்காததால் சம்பவம்.!



Maharashtra Mumbai Man Married Twins Complaint registered

 

இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞரின் மீது, சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, காந்திவிலி பகுதியில் வசித்து வரும் இரட்டை சகோதரிகள் ரிங்கி, பிங்கி (வயது 36). இவர்கள் இருவருமே ஐ.டி-யில் பணியாற்றி வருகிறார்கள். பிறந்தது முதல் இரட்டையராக இருக்கும் சகோதரிகள், ஒருநாள் கூட தனியாக இருந்தது இல்லை. 

சமீபத்தில் இரட்டை சகோதரிகளின் தந்தையும் உயிரிழந்துவிட, அவர்கள் தாயுடன் வசித்து வருகிறார்கள். இவர்களின் தாயாருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரை சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் அதுல் என்பவர் தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இது சகோதரிகளுக்கு ஆறுதலாக இருந்துள்ளது. 

maharashtra

பின்னாட்களில் அதுல் தன்னால் இயன்ற உதவியை சகோதரிகளின் தாயாருக்கு செய்தது, அதுலின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் இருவரும் அதுலை திருமணம் செய்ய முடிவெடுத்து, அதுலிடமும் பேசி இருக்கின்றனர். அவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, இருதரப்பு உறவினர்களும் திருமணத்திற்கு பேசி முடித்து, இரட்டை சகோதரிகளின் திருமண விழாவானது சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இவர்கள் குறித்த செய்திதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கான விஷயமாகவும் இருக்கிறது. ஆனால், அதுல் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.