2023 ல் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!
17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்.. நண்பன் என நம்பி சென்று நடந்த பயங்கரம்..!
17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்.. நண்பன் என நம்பி சென்று நடந்த பயங்கரம்..!

கல்லூரி மாணவியை ஒரே தெருவில் வசித்து வந்த சிறுவன் பலாத்காரம் செய்த பயங்கரம் அதிரவைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த அக். மாதம் 10ம் தேதி சிறுமியின் பிறந்தநாள் ஆகும்.
அன்றைய தினத்தில் சிறுமியின் தெருவிலேயே வசித்து வரும் 17 வயது சிறுவன், பிறந்தநாளுக்கு பரிசு அளிப்பதாக கேக் வாங்கி வெட்டி முத்தம் கொடுப்பது போன்று போனில் போட்டோ எடுத்து வைத்துள்ளான்.
பின்னர், இதனை சமூக வலைத்தளத்தில் பரப்பிவிடுவேன், பெற்றோருக்கு மாபிங் செய்து அனுப்பிவிடுவேன் என மிரட்டி இருக்கிறான். கயவனின் மிரட்டலுக்கு பயந்த சிறுமியை அக்.10ம் தேதியில் இருந்து நவ..26-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் பலமுறை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
கயவனின் துயரம் தொடர்ந்து வந்த நிலையில், கல்லூரியில் பயின்று வந்த சிறுமி தன்னிலையை வெளியே கூற இயலாமல் தவித்து வந்துள்ளார். இதற்கிடையில், சிறுமியின் செயல்பாடுகளில் உள்ள மாற்றத்தை பார்த்து நண்பர்கள் துருவி விசாரித்து இருக்கின்றனர்.
அப்போது, சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்த தகவல் அம்பலமாகவே, கார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வீட்டில் இருந்த கயவனை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.