Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மகாராஷ்டிராவில் ராட்ச இயந்திரம் சரிந்து விழுந்து 2 தமிழர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு...
மகாராஷ்டிராவில் ராட்ச இயந்திரம் சரிந்து விழுந்து 2 தமிழர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு...

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் சம்ருதி பகுதியில் உள்ள விரைவு சாலையின் 3ஆம் கட்ட கட்டுமான பணிகள் நடைப்பெற்று வந்தன. அதில் பல பேர் கட்டுமான பணியில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது பாலம் கட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வந்த இராட்ச இயந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 17 பேர் ராட்ச இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.