சிவன் கோவில் நந்தி தண்ணீர் குடிக்கும் அதிசியம்.. கோவிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்... வைரலாகும் வீடியோ.!

சிவன் கோவில் நந்தி தண்ணீர் குடிக்கும் அதிசியம்.. கோவிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்... வைரலாகும் வீடியோ.!


Madhya Pradesh Khandwa district Malwa- Nimar Village Shiva Temple Nandhi Drinks Water

நிமார் கிராமத்தில் உள்ள சிவன்கோவில் நந்தி தண்ணீரை குடிப்பதாக வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள காண்ட்வா (Khandwa) மாவட்டம், மால்வா - நிமார் பகுதியில் சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில், சிவனுக்கு நேரெதிரே நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சிவன் கோவில்களில் சிவனின் நேரெதிரில், சிவனை பார்த்தவாறு நந்தி சிலை இருப்பது வழக்கமானதே. 

இந்த நிலையில், மால்வா - நிமார் பகுதியில் உள்ள சிவன் கோவில் நந்தியானது தண்ணீர் குடிப்பதாக உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனால் மக்கள் திரளாக சென்று நந்திக்கு தண்ணீர் மற்றும் பால் கொடுத்து வருகின்றனர். பக்தர்கள் சிறிய ஸ்பூன் உதவியுடன் நந்திக்கு தண்ணீரை கொடுக்கிறார்கள். ஸ்பூனில் உள்ள நீரும் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிறது. (அது கலியாகிறதா? அல்லது கீழே சாய்க்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய இயலவில்லை). 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது கோவிலை விளம்பரம் செய்ய யுக்தி என்றும், கல் எப்படி தண்ணீர் குடிக்கும்? உங்களின் பக்தி மோகத்திற்கு அளவில்லையா? என்றும் பல்வேறு கேள்விகளும் குவிந்து வருகிறது.