என்னோட காதலி உனக்கு பொண்டாட்டியா? நெருங்கிய நண்பனாக பழகி தீட்டிய திட்டம்... கள்ளக்காதலுக்கு தடையான கணவன் எலும்பு கூடாக மீட்கப்பட்ட பயங்கரம்.!!!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரீவா மாவட்டத்தில், நண்பனாக பழகி நம்பிக்கை பெற்று கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் முன்னாள் காதலன் திட்டமிட்டு இந்தக் கொலையை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது வழக்கில் மேலும் பல கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நட்பாக பழகி தீட்டிய கொலைத் திட்டம்
போலீசார் வெளியிட்ட தகவலின்படி, சத்னா பகுதியைச் சேர்ந்த விபின் குமார் யாதவின் மனைவியுடன் முன்பு தொடர்பில் இருந்த சுனில் குஷ்வாஹா, அந்த உறவை மீண்டும் தொடர விரும்பியதாக கூறப்படுகிறது. இதற்குத் தடையாக இருந்த விபினை அகற்ற முடிவு செய்த சுனில், முதலில் அவருடன் நெருக்கமாக பழகி நம்பிக்கையைப் பெற்றார். பின்னர் டீக்கர் கிராமத்திற்கு அழைத்துச் சென்று, தனது கூட்டாளியுடன் சேர்ந்து விபின் குமார் யாதவ் என்பவரை கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்தவனுடன் அந்த கோலத்தில் மனைவியை கண்ட கணவன்! அடுத்து வலையில் சிக்கிய மகளும்....இறுதியில் 2 பேரும் திட்டம் போட்டு தீர்த்துகட்டிய கொடுமை...!!!
சடலத்தை மறைத்து சாட்சியங்களை அழிக்க முயற்சி
கொலைக்குப் பிறகு சந்தேகம் எழாமல் இருக்க, விபினின் உடலை மூன்று நாட்கள் அதே கிணற்றிலேயே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் சாட்சியங்களை மறைக்கும் நோக்கில் உடலை வெளியே எடுத்து ரகசியமாக புதைத்துள்ளனர். இதற்கிடையில், விபின் காணாமல் போனதாக அவரது தந்தை மார்ச் 26 அன்று போலீசில் புகார் அளித்திருந்தார்.
மொபைல் அழைப்புகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
ஆரம்ப விசாரணையில் எந்த முக்கிய துப்பும் கிடைக்காத நிலையில், விபினின் மனைவி மற்றும் சுனிலின் மொபைல் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அவர் காட்டிய இடத்தில் தோண்டியபோது விபினின் எலும்புக்கூடும் ஆடைகளும் மீட்கப்பட்டன. தற்போது சுனில் நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்தக் கொலையில் விபினின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 15 ஆண்டு கால வாழ்க்கை... பணத்துக்காக மனைவி போட்ட பலே திட்டம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காதலன்... வசமாகச் சிக்கிய கொடூர ஜோடி..!!!