அரசியல் இந்தியா

ம.பி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மருமகள் தற்கொலை.. திருமணமான 3 வருடத்தில் விபரீதம்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!

Summary:

ம.பி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மருமகள் தற்கொலை.. திருமணமான 3 வருடத்தில் விபரீதம்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!

மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மருமகள் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் இந்தர் சிங் பர்மர். இவருக்கு தேவராஜ் சிங் என்ற மகன் இருக்கிறார். தேவராஜ் சிங்குக்கும் - சவிதா (வயது 22) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. 

தம்பதிகள் இருவரும் கலாபிபால் நகரில் உள்ள பொஞ்சநேர் கிராமத்தில் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தேவராஜ் பக்கத்து கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

சவிதா தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தேவராஜ் மற்றும் இந்தருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடந்து வருகிறது. 


Advertisement