கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு! காதலனை 35 கி.மீ சுமந்த காதலி; வைரலாகும் வீடியோ.!

கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு! காதலனை 35 கி.மீ சுமந்த காதலி; வைரலாகும் வீடியோ.!



lovers---marriage---punishment---mathia-pradesh

மத்திய பிரதேசம் மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில், தேவிகாா் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இளம்பெண் ஒருவர் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் வேற்று ஜாதியினர் என்பதால் அவர்களின் திருமணத்திற்கு அந்த கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் பெண் வீட்டின் சார்பாக தான் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிராமத்து பஞ்சாயத்து கூடி அந்த இளம் ஜோடிகளுக்கு யாருமே இதுவரை பார்த்திராத எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான வினோதமான தண்டனையை வழங்கியுள்ளார்கள். அதாவது அந்த இளம் பெண் தனது காதலனை தூக்கிக்கொண்டு 35 கிலோமீட்டர் ஓட வேண்டும் என்பது தான் அந்த தண்டனை.



 

வலுக்கட்டாயமாக அனைவரும் சேர்ந்து அந்த தண்டனையை நிறைவேற்றி உள்ளார்கள் என்பது தான் கொடுமையான விஷயமாக உள்ளது. பின்பு இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது அடுத்து இதில் சம்பந்தப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.