இந்தியா

ஹோட்டலுக்கு ஒன்றாக சென்ற காதலர்கள்! அறை கதவை உடைத்து பார்த்தபோது ஊழியர்கள் கண்ட அதிர்ச்சி!

Summary:

lover suicide in hotel


புதுடெல்லியை சேர்ந்தவர் ரோசி என்ற இளம்பெண் அவரது காதலருடன் நேற்று பஹர்கஞ் பகுதியில் உள்ள ஹொட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கியுள்ளார். இருவரும் அறையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்குமிஅடையே சண்டை முற்றியதால் காதலன் அறையை விட்டு வெளியேறினார். இதனையடுத்து மனவேதனையடைந்த ரோசி, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் கோவத்தில் சென்றபிறகு நீண்ட நேரமாக கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஹொட்டல் ஊழியர்கள் ரோசி அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துள்ளனர்.

கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ரோசியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார். பின்னர் காதலனை கைது செய்தனர்.


 


Advertisement