அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
காதலிப்பது போல் நடித்து பணம் பறித்த காதலன்... 71 வயதில் 2 வது திருமணத்தால் எரிந்த உயிர்.!!
பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் (71). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் திருமண செயலியை பதிவிறக்கம் செய்த அவர் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால் என்ற 75 நபரை சந்தித்துள்ளார். இவர்கள் நட்பு பின்பு காதலாக மாறியது.
இந்நிலையில் திருமணம் குறித்து பேச்சு எழுந்த நிலையில் தனது சொந்த ஊரான இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தில் நடத்தலாம் என்று கிரேவால் கூறியுள்ளார். அதனை நம்பி ருபிந்தர் ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால், சில நாட்களுக்கு பிறகு அவர் மாயமானார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் இந்தியாவுக்கு சென்ற தனது சகோதரியை தொடர்புக்கொள்ள முடியாமல் போன நிலையில் அவரது மூத்த சகோதரி போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ருபிந்தரை காதலிப்பது போல் நடித்து கிரேவால் பணம் பறித்துள்ளார். மேலும் அவரிடமிருந்து பணத்தை பறிப்பதற்காக இந்தியாவுக்கு வரவழைத்துள்ளார்.
இதையும் படிங்க: "நம்ம ஆளுங்கள விட காதல் பெருசா.." பெண் போலீஸ் கௌரவ கொலை.!! தம்பி வெறி செயல்.!!
இந்தியா வந்த அவரிடம் பணத்தை பறித்த கிரேவால், ருபிந்தரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சிக்ஜீத் சிங் என்பவரிடம் ரூ.50 லட்சம் பணம் தருவதாக கூறி ருபிந்தரை கொலை செய்து எரித்துள்ளார். ருபிந்தரின் எலும்புகளை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கிரேவாலை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "அவன்கிட்ட எத கண்ட..." காதலிக்க மறுத்த பெண்.!! சுட்டு கொன்ற காதலன்.!!