இந்தியா

நண்பனுக்கு எதார்த்தமாக பரிசாக கொடுத்த லாட்டரி சீட்டு! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன நண்பன்!

Summary:

lottoery gift crore price


கேரள மாநிலம் சொவ்வர பகுதியில் வாடகை டாக்ஸி ஓட்டுநராக இருப்பவர் ஷாஜி. இவர் அவருடைய நெருங்கிய நண்பரான சந்தோஷ் என்பவருக்கு லாட்டரி சீட்டு ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் சந்தோஷின் சகோதரர் அவரை தொடர்புகொண்டு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது என தெரிவித்தபோது சந்தோஷ் நம்பவில்லை.

ஆனால் ஷாஜி பரிசாக அளித்த லாட்டரி சீட்டில் முதல் பரிசாக ஒரு கோடி சந்தோஷிற்கு கிடைத்துள்ளது. வாடகை டாக்ஸி ஓட்டுநராக இருக்கும் ஷாஜி லொட்டரி சீட்டு வாங்குவதை வாடிக்கையாக கொண்டவர். ஆனால் இதுவரை அவருக்குபெரிதாக எதுவும் பரிசு கிடைத்ததில்லை.

ஆனால் தற்போது சந்தோஷிற்கு பரிசாக கிடைத்த ஒரு கோடி பணத்தில், புதிதாக ஒரு ஆட்டோ வாங்கவும் மீதமுள்ள பணத்தில் தமது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


 


Advertisement