இந்திய விவசாயிகளுக்காக லண்டனில் வெடிக்கும் போராட்டம்.!

இந்திய விவசாயிகளுக்காக லண்டனில் வெடிக்கும் போராட்டம்.!


london people protest for indian farmers

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் புராரி மைதானத்திலும், டெல்லி எல்லைகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரிலும் விவசாயிகள் சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 12-வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய உயர் மட்ட குழு அலுவலகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து லண்டன் போலீசார் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இதற்க்கு முன்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் இருநாடுகளின் உறவும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.