இந்தியா

வெட்டுக்கிளி வறுவல்..! வெட்டுக்கிளி பிரியாணி..! உயிருடன் பிடித்து சமைக்கும் இந்தியர்கள்..! சூடுபிடிக்கும் வியாபாரம்..! என்ன காரணம் தெரியுமா..?

Summary:

Locust biriyani and gravy food goes viral

கொரோனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் பரவலாக பேசப்படும் விவாதங்களில், பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல். இந்தியாவிற்குள் நுழைந்துள்ள இந்த கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகளால் இந்தியாவின் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

வட மாநிலங்களில் நுழைந்துள்ள இந்த வெட்டுக்கிளிகள் தற்போது தமிழகத்திற்குள்ளும் நுழைய தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதலைச் சமாளிக்க பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் பல உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை செய்து வருகின்றது.

குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மக்கள் வெட்டுக்கிளிகளை உயிருடன் பிடித்து சமைத்து சாப்பிட தொடங்கியுள்ளனர். வெட்டுக்கிளிகள் உணவு வகைகள் மிகவும் ருசியாக இருப்பதாக ராஜஸ்தான் பகுதி மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக, வெட்டுக்கிளிகளில் அதிக புரதச் சத்து இருப்பதாகவும் அறிவுரை வழங்குகின்றனர்.


Advertisement