இந்தியா லைப் ஸ்டைல்

சாலையில் வந்த சிங்க கூட்டம்..! வாகனத்தில் வந்த இருவர்..! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Lions gave way to biker in Gujarat video goes viral

ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு அந்த வழியே வந்த சிங்க கூட்டங்கள் வழிவிட்டு சென்றுள்ள சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தின் கோதியானா என்ற இடத்தில் உள்ள சாலையில் சிங்கம் ஓன்று தனது இரண்டு குட்டிகளுடன் நடந்து செல்கிறது.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சிலர் வர, சிங்க கூட்டத்தை பார்த்ததும் அப்படியே நிற்கின்றனர். மனிதர்களை பார்த்த சிங்கம் அவர்களை தாக்காமல் அவர்களுக்கு வழிவிட்டு வேறுவழியில் செல்கிறது.

இதுகுறித்து கூறும் அந்த பகுதி மக்கள், இதுபோன்று சிங்கங்கள் பல நேரங்களில் சாலைகளில் வந்தாலும் தங்களை தாக்குவது இல்லை என கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement