பெரும் அதிர்ச்சி! ஆந்திரா பேருந்து மலமலவென தீ பிடிக்க காரணம் 234 ஸ்மார்ட்போன்கள்..? ஒரே நேரத்தில் வெடித்து.... தடயவியல் நிபுணர்கள் அளித்த அதிர்ச்சி தகவல்!



kurnool-omni-bus-fire-234-smartphones-explosion

இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலை பரவவைத்த பேருந்து விபத்து தொடர்பான புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தொழில்நுட்பத்திற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கர்னூல் அருகே நிகழ்ந்த பேரழிவு

ஹைதராபாதிலிருந்து பெங்களூருக்குச் சென்ற ஓம்னி பேருந்து கர்னூல் அருகே இருசக்கர வாகனத்தை மோதி கட்டுப்பாட்டை இழந்து தீப்பற்றி எரிந்தது. இந்த துயர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: பயங்கர விபத்து! மேம்பாலத்தில் நாய் குறுக்கே வந்ததால் டேங்கர் லாரியில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்! உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு....

ஸ்மார்ட்போன்கள் காரணமா? அதிர்ச்சியான தடயவியல் கண்டுபிடிப்பு

விபத்தில் தீ வெடிப்புக்கு 234 ஸ்மார்ட்போன்கள் ஒறே நேரத்தில் வெடித்ததே முக்கிய காரணம் என தடயவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். ரூ.46 லட்சம் மதிப்பிலான இந்த போன்களை ஹைதராபாத் தொழிலதிபர் பெங்களூருக்கு பார்சல் முறையில் அனுப்பியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து தீப்பற்றிய நேரத்தில் போன்களின் பேட்டரிகள் மற்றும் ஏசி பேட்டரி வெடித்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்ச்சியான பேருந்து தீ விபத்துகள் கவலை

இதற்கு இணையாக நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த பஸ்சில் திடீரென தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய பேருந்து தீ சம்பவங்கள், பயணிகள் பாதுகாப்பு மற்றும் வணிக சரக்குகள் பரிமாற்றத் தரநிலைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி! ஆந்திரா பேருந்து தீ விபத்தில் லக்கேஜ் கேபினில் மறைந்திருந்த 400 மேற்பட்ட..... தடவியல் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!