சுட சுட டீ குடித்த 12 ஆம் வகுப்பு மாணவன்! அடுத்த சில நிமிடங்களில் நடந்த அதிர்ச்சி.... அப்பா கேட்ட கேள்விக்கு மகன் சொன்ன 'அந்த 'ஒரு காரணம்! அதிர்ச்சியில் உறைந்த தந்தை..!!!
கொல்கத்தா நரேந்திரபூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளியில் தங்கி படித்து வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் திப்தான்ஷு மஹதோ, தெர்மாஸில் இருந்த கொதிக்கும் தேநீரைக் குடித்த பிறகு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த மரணத்தைச் சுற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடல்நிலை மோசமான பிறகும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையா?
மாணவரின் தந்தை அளித்த புகாரின்படி, சம்பவத்தன்று காலை 11.15 மணியளவில் மகனின் உடல்நிலை குறித்து பள்ளி நிர்வாகத்திலிருந்து தகவல் வந்துள்ளது. ஆனால், அவர் மதியம் 1 மணியளவில் பள்ளிக்குச் சென்றபோதும் மாணவர் தொடர்ந்து இருமிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தண்ணீர் குடித்த உடனேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறப்பதற்கு முன் மாணவர் கூறிய தகவல்
''வாய் வெந்தும் ஏன் கொதிக்கும் டீயை விழுங்கினாய்?'' என்று தந்தை கேட்டபோது, ''வெளியில் துப்பினால் தரை அசிங்கமாகிவிடும். அதனால் விழுங்கினேன்'' என்று மாணவர் கூறியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். இந்த தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மருத்துவர்கள் விளக்கம்; போலீஸ் விசாரணை தீவிரம்
இந்த மர்ம மரணம் குறித்து மருத்துவர் ரவிகாந்த் சதுர்வேதி விளக்கம் அளிக்கையில், வெறும் சூடான தேநீர் குடிப்பதால் மட்டுமே நேரடியாக உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் அரிது என்று தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். கொதிக்கும் திரவத்தால் உணவுக்குழாய் அல்லது சுவாசக்குழாயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அல்லது வேறு உடல்நலக் காரணங்களும் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தெர்மாஸ் பாத்திரத்தின் சுகாதார நிலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.