இறந்தவருக்கு இறுதி சடங்கு முடிந்து ஒரு வாரம் ஆச்சு.. ஆனால்... ஒரு வாரம் கழித்து குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இறந்தவருக்கு இறுதி சடங்கு முடிந்து ஒரு வாரம் ஆச்சு.. ஆனால்... ஒரு வாரம் கழித்து குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி


Kolkata dead covid 19 patient back to home after 1 week

கொரோனாவால் உயிரிழந்த நபருக்கு இறுதி சடங்கு முடிந்து ஈம காரியம் நடக்கும்போது அவர் உயிருடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த 75 வயது முதியவர், ஷிப்தாஸ் பானர்ஜி. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷிப்தாஸ் பானர்ஜி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கடந்த 13 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஷிப்தாஸ் பானர்ஜியின் உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். கொரோனா மரணம் என்பதால் இறந்தவரின் முகம் உறவினர்களுக்கு கட்டப்படவில்லை. இதனால் முகத்தை கூட பார்க்காமல் உறவினர்கள் இறுதி சடங்கை முடித்துவிட்டனர்.

இதனை அடுத்து ஒரு வாரம் கடந்த நிலையில் இறந்து போன ஷிப்தாஸ் பானர்ஜிக்கு அவரது உறவினர்கள் ஈம காரியம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அப்போது மருத்துவமனையில் இருந்து அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துபோனார்கள்.

காரணம், ஷிப்தாஸ் பானர்ஜி இறக்கவில்லை. அவர் உயிருடன் இருப்பதாகவும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 75 வயதுடைய மோகினிமோகன் மூகர்ஜி என்பவரின் மருத்துவ அறிக்கை ஷிப்தாஸ் பானர்ஜியின் மருத்துவ அறிக்கையோடு தவறுதலாக கலந்துவிட்டதால், அவர்தான் இறந்துவிட்டதாக எண்ணி மோகினிமோகன் மூகர்ஜியின் உடலை தவறுதலாக ஷிப்தாஸ் பானர்ஜியின் உறவினர்களிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதனிடையே, மருத்துவமனையின் இந்த அலட்சிய போக்கிற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகிறது.