ரூ.25 கோடி கிடைத்தும் நிம்மதியை இழந்த சாமானியன் கண்ணீர் வீடியோ; பணமே கிடைக்காமல் இருந்திருக்கலாம் என வேதனை.!



kerala-thiruvananthapuram-lottery-won-man-cried-video

அதிக பணம் நிம்மதியை கெடுக்கும் என அனுபவித்தவர்கள் சொன்னது மெய்ப்பட பம்பர் லாட்டரி பரிசால் நிரூபணம் ஆகியுள்ளது.

கேரள மாநிலத்தில் அரசின் சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓணம் பண்டிகைக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகையுடன் லாட்டரி விற்பனை செய்யப்பட்ட நிலையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.25 கோடி பரிசு கிடைத்தது. இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

பரிசு கிடைத்த மறுநாளில் அவருக்கு வெறிபிடித்தம் போக ரூ.15 கோடியே 75 இலட்சம் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பணத்தை வைத்து அனூப் வீடு கட்டப்போவதாகவும், ஏழை எளிய மக்களுக்கு உதவப்போவதாகவும் தெரிவித்து இருந்தார். இதனால் பலரும் அவரிடம் உதவி கேட்டு அனூப்பின் வீட்டிற்கே சென்றுள்ளார்.

மேலும், மருத்துவ செலவுக்கும், தொண்டு நிறுவனத்திற்கு பணம் தரும்படியும் பலரும் கேட்டுள்ளனர். உறவினர்கள் தங்களின் பங்குக்கு வந்து உரிமையுடன் பணம் கேட்டு செல்வதாகவும், கடைக்கு சென்றால் கூட உரிய விலையை கூறாமல் அதிகமாக கேட்கிறார்கள் என்றும், சிலர் தங்களுக்கு தொடர்பு கொண்டு மிரட்டுவதாகவும் அனூப் கண்ணீர் ததும்ப தெரிவிக்கிறார்.

இதனால் பரிசு கிடைத்த சில நாட்களுக்கு உள்ளாகவே அனூப் பதறிப்போன நிலையில், வீட்டை விட்டு வெளியேறவும் பயந்து கிடந்துள்ளார். இவர் தனது வீட்டினை பூட்டிவிட்டு சகோதரியின் வீட்டில் தற்போது வசித்து வருகிறார். எனக்கு பணமே வந்து சேராத நிலையில், பலரும் எங்களிடம் உதவி கேட்டு வருகிறார்கள். 

இவ்வுளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்றால், அந்த பணம் எங்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். இன்று நிம்மதியை இழந்து நாங்கள் தவிக்கிறோம் என்று வேதனையுடன் அனூப் வீடியோ வெளியிட்டுள்ளார்.