அதிவேகத்தில் பைக் ரேசில்.. பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பகீர்..!

பைக் ரேசிங்கில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களின் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் பகுதியில் அதிகளவு பைக் ரேசிங் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனை தடுக்க காவல்துறை பல்வேறு வகையில் முயற்சியெடுத்தாலும் சில நேரங்களில் அது கைகூடுவதில்லை.
இந்த நிலையில், நேற்று திருவனந்தபுரம் அருகே உள்ள பகுதியில் காற்றைக் கிழித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் அதிவேகத்தில் சென்றனர். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், இரு வாகன ஓட்டிகளும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.