கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய துடிக்கும் சைக்கோ இளைஞன்; வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி நடந்த கொடுமையில் பகீர்.!
கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் என பெண்ணிடம் ரூ.10 இலட்சம் ஏமாற்றிய இளைஞர், அவரை பலாத்காரம் செய்து மிரட்டி வரும் கொடுமை நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம், பராவூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சுபயர் (வயது 36). இவர் அதே பகுதியை சார்ந்த இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், இளம்பெண் தனக்கு ஏதேனும் வேலை வாங்கி தர முடியுமா? என கேட்ட நிலையில், முகமது சுபயர் ரூ. 10 லட்சம் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரூ. 10 லட்சத்தை சிறிது சிறிதாக பெண் கொடுத்த நிலையில், இளம்பெண்ணை தொடர்பு கொண்ட முகமது எர்ணாகுளத்தில் இருக்கும் தனியார் ஹோட்டலில் நேர்முகத்தேர்வு நடைபெறுவதாகவும், அங்கு வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.
அங்கு சென்ற பெண்ணுக்கு அறையில் மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜூசை குடித்த பெண்மணி மயங்கி இருக்கிறார். அங்கு முகமது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் கொடூரத்தை நடத்திய முகமது, பெண் கர்ப்பிணியானபோதும் பாராது மிரட்டி இருக்கிறார். இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் முகம்மதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.