#Video: பேருந்தை இடைமறித்து, பயணிகளை கதறிவிட்ட ஒற்றை யானை.. ஒன் மேன் ஆர்மியாக அலப்பறை..!

#Video: பேருந்தை இடைமறித்து, பயணிகளை கதறிவிட்ட ஒற்றை யானை.. ஒன் மேன் ஆர்மியாக அலப்பறை..!



Kerala Munnar Kerala Govt KSRTC Bus Rushes by Elephant

அரசு பேருந்தை இடைமறித்து உணவு சோதனை நடத்திய யானை, உணவு ஏதும் கிட்டாததால் பேருந்தை விட்டு விலகிச் சென்றது.

கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களுக்கு சென்று வர சாலைவசதிகள் உள்ளது. இவ்வழியாக வாகனங்கள் செல்லும் சமயத்தில், சில நேரங்களில் வனவிலங்குகள் உணவுக்காக வாகனத்தை வழிமறிப்பது வழக்கம். இவற்றில் யானைகள் இரவு வேளைகளில் அவ்வழித்தடத்தில் செல்லும் பேருந்து, கனகர லாரி மற்றும் கார் உட்பட பல்வேறு வாகனத்தை இடறிமறித்து உணவுகளை தேடும்.

இந்த நிலையில், நேற்று கேரள மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து பயணம் செய்தது. பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், காட்டுப்பாதையில் சென்றபோது யானை திடீரென சாலையின் குறுக்கே வந்துள்ளது. யானையை பார்த்ததும் பேருந்து ஓட்டுநர், பேருந்தையை அங்கேயே நிறுத்திவிட்டு பயணிகளை அமைதியாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். 

பேருந்தை பார்த்த யானையோ உணவு ஏதேனும் கிடைக்கும் என்ற ஆசையில், தனது பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் பொருட்டு துதிக்கையை உயர்த்தி இருக்கிறது. மேலும், பேருந்தை சுற்றிச்சுற்றி உணவை தேடிய நிலையில், பேருந்தில் இருந்த பயணிகளோ பதற்றத்தில் உயிரை கையில் பிடித்து இருக்கின்றனர். யானை பேருந்தை வட்டமிடும், அது பின்பக்கம் செல்வதை கவனித்த ஓட்டுநர், மின்னல் வேகத்தில் பேருந்தை கிளப்பிக்கொண்டு சென்றுள்ளார்.