நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
மீண்டும் நெஞ்சை உலுக்கும் மர்மம்.. கேரளாவில் மாடல் அழகி தற்கொலை..!

பிரபல மாடல் அழகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோட்டில் வசித்து வந்த பிரபல மாடல் அழகி ஷகானா. இவர் திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது 19வயதில் கோழிக்கோடு பகுதியில் வசித்து வந்த ஷாஜத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், நேற்று கோழிக்கோட்டில் உள்ள தனது கணவர் வீட்டில் ஷகானா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஷகானாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், திருமணமாகி ஒரு வருடம் மட்டுமேயானதால் சந்தேகத்தின் பெயரில் ஷகானாவின் கணவரையும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் உறவினர்கள் மத்தியிலும் விசாரணை நடத்திய நிலையில், ஷாஜத் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்ததாகவும், இதன் காரணமாக அவரை கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியுள்ளனர். இதனால் ஷாஜத்தின் மீது சந்தேகம் எழ காவல்துறையினர் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.