இந்தியா லைப் ஸ்டைல்

கட்டிட தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்!! தொகையை பார்த்ததும் மனுஷன் அதிர்ச்சியில் ஆடிபோய்ட்டாரு!!

Summary:

கேரளாவை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவருக்கு லாட்டரி மூலம் 10 கோடி ரூபாய் பரிசு விழுந்த சம்ப

கேரளாவை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவருக்கு லாட்டரி மூலம் 10 கோடி ரூபாய் பரிசு விழுந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா மாநிலம் வடகரா பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான ஷிஜூ. இவர், கேரளாவில் விற்பனையாகிவரும் லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கம். அந்தவகையில் வழக்கம்போல் ஷிஜூ கேரளா பம்பர் லாட்டரி குலுக்கல் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் கடந்த 22-ந்தேதி நடந்த நிலையில், ஷிஜூக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்ததுள்ளது. ஆனால் தனது லாட்டரி சீட்டுக்கு 10 கோடி பரிசு விழுந்ததை ஷிஜூ யாரிடம் சொல்லவில்லை. இதனால் முதல் பரிசு யாருக்கு விழுந்தது, அவர் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில்தான் ஷிஜூ தனது லாட்டரி சீட்டை அங்குள்ள வங்கிக்கு சென்று டெபாசிட் செய்தார். அதன்பின் தான் ஷிஜூவுக்கு கேரள பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு விழுந்தது என அனைவருக்கும் தெரியவந்தது.

இதுகுறித்து பேசிய அவர், "அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் தனக்கு இருப்பதாகவும், இதுவரை ஒருமுறை கூட பரிசு விழவில்லை. ஆனால் இந்தமுறை 10 கோடி பரிசு விழுந்ததால் இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து என்னால் சட்டென வெளியில் வர முடியவில்லை. அதற்கு சில நாட்கள் அவகாசம் தேவை பட்டது. அதனால்தான் இதுகுறித்து யாரிடமும் நான் எதுவும் கூறவில்லை. இனி எனது கஷ்டம் எல்லாம் தீரப்போகிறது என கூறியுள்ளார் ஷிஜூ.


Advertisement