இந்தியா

நம்பிவந்த இளைஞரை நிர்வாணமாக நிற்கவைத்து இளம் பெண் செய்த காரியம்! அட கொடுமையே! அதிர்ச்சி தகவல்

Summary:

இளைஞர் ஒருவரை வரவழைத்து இளம் பெண் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த இளைஞரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவரை வரவழைத்து இளம் பெண் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த இளைஞரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கேரளா மாநிலம் கொத்தமங்கலத்தை சேர்ந்த ஆர்யா என்ற முன்பின் பழக்கம் இல்லாத இளம் பெண் ஒருவரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் மிக நெருக்கமானநிலையில் ஆர்யாவை நேரில் சந்தித்து பேசவேண்டும் என அந்த இளைஞர் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து சொகுசு ஹோட்டல் ஒன்றுக்கு வருமாறு ஆர்யா அந்த இளைஞரிடம் கூறியுள்ளார். உடனே அந்த இளைஞரும் உற்சாகமாக அந்த பெண்ணை காண புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண் கூறிய அறைக்குள் சென்ற அந்த இளைஞருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அந்த அறைக்குள் அந்த பெண் மட்டும் இல்லாமல் அவருடன் மேலும் நான்கு இளைஞர்கள் இருந்துள்ளனர். நிலைமையை புரிந்துகொண்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது அவர்கள் அவரை மிரட்டி, உடைகளை அவிழ்த்து அந்த பெண்ணுடன் நிர்வாணமாக நிற்கவைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

பின்னர் அந்த புகைப்படத்தை அவரிடம் காண்பித்து, இந்த படத்தை உனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு காட்டக்கூடாது என்றால் மூன்றரை லட்சம் பணம் தரவேண்டும் என மிரட்டியுள்ளனர். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என அந்த இளைஞர் கூறியதை அடுத்து அவர்கள் அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளனனர்.

இதனிடையே அவரிடம் இருந்த ATM அட்டையை வாங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தையும் எடுத்துள்ளனர். இந்நிலையில் காரில் இருந்த அந்த இளைஞர் தான் சிறுநீர் கழிக்கவேண்டும் என கூற, அவர்கள் காரை நிறுத்தியுள்ளனர். காரில் இருந்து இறங்கிய அந்த இளைஞர் தன்னை காப்பாற்றுங்கள் என கத்தியுள்ளார்.

உடனே அங்கிருந்த சிலர் ஓடிவந்து காரை மடக்கி உள்ளே இருந்தவர்களை பிடித்ததோடு, அவர்களிடம் இருந்து அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளம் பெண் ஆர்யா மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை கைது செய்து விசாரித்துவருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 


Advertisement