டாட்டூ பதிவிட சென்ற பெண்களிடம் சில்மிஷம்.. பிரபல டாட்டூ கலைஞர் மீது பரபரப்பு புகார்.!

டாட்டூ பதிவிட சென்ற பெண்களிடம் சில்மிஷம்.. பிரபல டாட்டூ கலைஞர் மீது பரபரப்பு புகார்.!


Kerala Kochi Tattoo Artist Sexual Harassment Model and More Girls Complaint Registered

இன்றுள்ள காலத்தில் இளம்தலைமுறை தங்களின் உடல்களில் டாட்டூ வரைந்துகொள்வது இயல்பான விசயமாகியுள்ளது. மேலும், பல நடிகர், நடிகைகள் தங்களின் உடலில் டாட்டூ வரைந்து அழகை வெளிப்படுத்தி வருவதால், அதனைப்போல ரசிகர்களும் டாட்டூ வரைய வேண்டும் என எண்ணுகின்றனர். 

இதில், ஆண் - பெண் பேதமின்றி டாட்டூ வரைய, அதற்கான கலைஞர்களை தேடி செல்லும் நிலையில், டாட்டூ கலைஞர்கள் என்ற பெயரில் சிலர் பெண்களை குறிவைத்து அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளன. 

KERALA

இந்நிலையில், டாட்டூ வரைய சென்ற மாடல் அழகி, கொச்சியை சேர்ந்த பிரபல டாட்டூ கலைஞர், டாட்டூ வரையும் போது சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மாடல் அழகியை போல பலரும் சமூக வலைத்தளங்களில் புகாரை பதிவு செய்தனர். 

இந்த பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் தொடர்பான புகார் காவல் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லவே, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Note: Title image is Respective