மொத்த குடும்பமும் போச்சு... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு! அதிரவைக்கும் காரணம்... நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!!!



kerala-family-three-deaths-financial-crisis

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த மணிலால் (52), அவரது மனைவி ஸ்மிதா (45), மகன் அபிலால் (22) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் விபரீத முடிவு எடுக்கப்போவதாக முன்கூட்டியே உறவினர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்களுக்கு முன்கூட்டியே தகவல்

நெய்யாற்றின்கரை அருகே வசித்து வந்த இந்தக் குடும்பத்தினர், கடந்த சில காலமாக கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் விபரீத முடிவை எடுக்கப்போவதாக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 43-வது மாடியிலிருந்து குதித்த 35 வயது இளைஞர்! 2 துண்டான உடல்.. அதிரவைக்கும் காரணம்..? கலங்கவைக்கும் சம்பவம்...!!!

வீட்டில் மயங்கிக் கிடந்த மூவர்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் உடனடியாக அவர்களது வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு மணிலால், ஸ்மிதா, அபிலால் ஆகிய மூவரும் சுயநினைவின்றிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மூவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் குறித்து போலீசார் விசாரணை

குடும்பத்தினர் எதிர்கொண்ட நிதி நெருக்கடிதான் இந்த முடிவுக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தனவா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூவரின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி..! ஓடும் காரில் 20 வயது இளம்பெண்ணுக்கு 2 மணி நேரமாக நடந்த கொடூரம்...! கதறி துடித்தும் விடாத கொடுமை... நடுங்க வைக்கும் நள்ளிரவு சம்பவம்..!!!