இந்தியா

வைரல் வீடியோ: வேகமாக வந்த ஜேசிபி இயந்திரம், நேருக்கு நேர் மோதிய கார்..! நொடியில் உயிர்தப்பிய இளைஞர்.!

Summary:

Kerala car and jcb accident viral video

ஜேசிபி வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு - பாலக்கோடு இடையே உள்ள சாலையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பைக்கில் அமர்ந்தவாறு போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் ஜேசிபி வாகனம் ஒன்று அதிவேகத்தில் தறிகெட்டு ஓடி வருகிறது.

அதேநேரம் எதிர் திசையில் மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று வந்துகொண்டிருந்தநிலையில் ஜேசிபி வாகனம் கார் மீது மோதப்போவதை அறிந்து கார் ஓட்டுநர் காரை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் கார், ஜேசிபி வாகனம் இரண்டும் கடுமையாக மோதிக்கொண்டு கார் அந்த இளைஞரை நோக்கி திரும்புகிறது.

இதில் சட்டென சுதாரித்த அந்த இளைஞர் பைக்கில் இருந்து எழுந்து அங்கிருந்து நகர்கிறார். இறுதியில் எந்த ஒரு காயமும் இல்லாமல் அந்த இளைஞர் அதிர்ஷ்டவமாக உயிர்பிழைக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவானநிலையில் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement