எல்.கே.ஜி சிறுமி 26 வயது இளைஞனால் பலாத்காரம்; 45 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு.!



Kerala Azhappuzha Minor girl Rape Case Judgement 

 

கேரளா மாநிலத்தில் உள்ள ஆழப்புழா, அடூர் பகுதியில் வசித்து வந்த பச்சிளம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளியான சதீஷ் (வயது 26) என்பவர் விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டார். சிறுமி அப்போது எல்.கே.ஜி படித்து வந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அதனை தனக்கு சாதகமாக்கிய கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இவ்வழக்கு தொடர்பான விசாரணை அம்மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

KERALA

வழக்கின் இறுதி விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதித்த நீதிபதி, 45 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கினார். மேலும், குழந்தையின் படிப்பு உட்பட எதிர்கால செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.