இதை படகு மாதிரி பயன்படுத்தி பயணம் செய்த மணமக்கள்..!! வித்தியாசமான முறையில் நடந்து முடிந்த திருமணம்.!!kerala-3VKMH5

கேரளா மாநிலத்தில் கடந்த சில  நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த கனமழையால்  பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது.   இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட   மாவட்டங்களில் ஆலப்புழாவும் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ளதால் மக்களால் வீட்டை விட்டு வெளியேறாமல் கூட வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ளதால்,  ஆலப்புழாவை சேர்ந்த  ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கும் நேற்று  நடக்கவிருந்த திருமணத்தில் மணமக்களால் மண்டபத்திற்க்கு செல்ல முடியவில்லை.

Kerala rains

பின்னர் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு திட்டம் தீட்டிய மணமக்கள் ஒரு சமையல் அலுமினிய பாத்திரத்தில் அமர்ந்துச் சென்று, படகு போல பயணம் சென்று உரிய நேரத்தில் தாளவாடியில் உள்ள மண்டபத்திற்க்குச் சென்றனர். பின்னர் இவர்களது திருமணம் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இவர்களுக்கு நடந்து முடிந்த திருமணத்தைக் கண்ட அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.