கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
உல்லாசத்துக்காக கணவரின் உறவினருடன்., மனைவி ஓட்டம்.. ஆற்றில் மிதந்த சடலம்.!

கர்நாடகாவைச் சேர்ந்த பொக்லைன் இயந்திர டிரைவரான ரவி என்பவருக்கு லாவண்யா என்ற மனைவி இருந்துள்ளார். லாவண்யாவுக்கு ரவியின் உறவுக்கார நபரான பிரதீப் என்பபவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய நிலையில், இவர்களது விவகாரம் ரவிக்கு தெரியவந்து இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் லாவண்யா அவருடன் சண்டை போட்டுக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சிறிது நாட்கள் இருந்த அவர் பின்னர் பிரதிப்புடன் ஓடிவிட்டார். இது கணவர் ரவிக்கு மிக மன உளைச்சலை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் அவர் தனது வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளார்.
அப்போது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். இந்த நிலையில், ஹேமாவதி ஆற்றில் ரவியின் உடல் மிதப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 11 ஆண்டு காதல் திருமணத்துக்கு, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து ட்விஸ்ட் வைத்த பெண்.. பாசத்தால் பரிதவித்து உயிரைமாய்த்த கணவன்.!
மனைவி ஓடி விட்டதால் அவர் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், ரவியின் சகோதரி லாவண்யா தான் திட்டமிட்டு தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து ரவியை கொன்று ஆற்றில் வீசியதாக புகார் கொடுத்துள்ளார். தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிவேகத்தில் நடந்த பயங்கரம்.. 5 பேர் உடல் நசுங்கி பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!