
பிறந்தநாள் கொண்டாட முடியாததால் விரக்தி..தாயின் விபரீத முடிவால் கண்ணீர் சோகம்.!
மகனின் பிறந்தநாளை கொண்டாட முடியாததால், மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு கனகபுரா ரோடு கிரிகவுடன தொட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகண்டா. இவரது மனைவி தேஜஸ்வினி (வயது 35). தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், நேற்று முன்தினம் திடீரென காலை தேஜஸ்வினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தேஜஸ்வினியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அத்துடன் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த 6ஆம் தேதி தம்பதியின் ஆண் குழந்தைக்கு இரண்டாவது பிறந்தநாள் என்பதால் மகனின் பிறந்தநாளை மிகவும் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று தேஜஸ்வினி கணவரிடம் கூறியுள்ளார். ஆனால், கோழி பண்ணை வைத்து நடத்தியதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட விருப்பமில்லாமல் மைசூருக்கு சென்றது தெரியவந்துள்ளது.
இதனால் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட இயலவில்லையே என்ற விரக்தியில் மனமுடைந்த தேஜஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இதுகுறித்து பெங்களூரு புறநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement