அனுதினமும் சித்ரவதை.. கணவன் குடும்பத்தாரால் விபரீதம்.. பெண் பரிதாப பலி.. காரணம் என்ன? 



Karnataka Woman Dies by Suicide Following Alleged Dowry Harassment, Police Investigate

கணவன் - அவரின் குடும்பத்தார் செய்த கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. 

திருமணம்:  

கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், கொரேட்டகெரே பகுதியைச் சேர்ந்தவர் காவியா (வயது 25). பெங்களூரில் உள்ள நெலமங்களா பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. 

இதையும் படிங்க: "மாமா நான் வேண்டாம்னா நீ உயிரோடவே இருக்க வேண்டாம்" - இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. பறிபோன உயிர்.!

வருத்தம்: 

திருமணத்துக்குப்பின் கணவர், அவரின் பெற்றோருடன் பெண் வசித்து வந்துள்ளார். திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆகும் நிலையில், குழந்தை பிறக்கவில்லை என காவியா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும், சில மாதங்களாகவே கணவன், அவனின் குடும்பத்தினர் காவியாவை கொடுமை செய்து வந்துள்ளனர். 

Crime news

தகராறு: 

குழந்தை இல்லாதது தொடர்பாக எழுந்த தகராறு, வரதட்சணை கொடுமையாக ஒருகட்டத்தில் மாறி இருக்கிறது. இதனிடையே, நேற்று முன்தினமும் தம்பதிகளுக்குள் வாக்குவாதம் எழவே, பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: ரூ.50 லட்சம், நிலம், வீடு வாங்கிட்டு வா.. எஸ்ஐ கணவனை உள்ளே தூக்கி வைத்த வக்கீல் மனைவி.! தரமான சம்பவம்.!