கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
பிரபல வாஸ்து சாஸ்திர நிபுணர் 2 பேர் கும்பலால் கொடூரமாக குத்திக்கொலை... நடந்தேறிய பயங்கரம்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி விடுதியில், பிரபல வாஸ்து சாஸ்திர நிபுணர் சந்திரசேகர் குருஜி என்பவர் குத்தி கொல்லப்பட்டார். இவரை இரண்டு பேர் கும்பல் கொலை செய்து தப்பி சென்றது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து குருஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்கையில் 2 பேர் குருஜியை கொலை செய்து சென்றது அம்பலமானது. வரவேற்பது போல நாடகமாடி சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமிரா ஆதாரத்துடன் மஞ்சுநாத், மஹாந்த்தேஷ் ஆகியோர் பெலகாவியில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.